Sunday, February 5, 2012

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி, வெங்காயம், உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர், ரூபாயும், டாலரும், கண்காட்சி, கேள்வி பதில்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி குறையக் காரணம் சரியான சப்ளை இல்லாததும், குவாலிட்டி சரியான படி இல்லாததும் தான் என்று சமீபத்தில் ஸ்பைசஸ்  போர்ட் சேர்மன் அறிவித்துள்ளார். வாசனைப் பொருட்கள் உற்பத்தியில், உபயோகிப்பதில் உலகளவில் நம்பர் ஒன்னாக இருக்கிறது.


வெங்காயம்

வெங்காயம் உற்பத்தி மிகவும் அதிகமாகிவிட்டதாலும், நிறைய ஸடாக் இருப்பதாலும் ஒர் டன் அமெரிக்க டாலர் 150 வரை இருந்த மினிமம் ஏற்றுமதி விலை என்ற கட்டுப்பாடையும் நீக்கிவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? வெங்காயம் தொடர்ந்து அரசுக்கும், விவசாயிகளுக்கும் தொந்தரவுகள் தந்து கொண்டே தான் இருக்கிறது, ஏன் அதை உறிக்கும் வீட்டுக்கார அம்மணிக்களுக்கும் தான்.



உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர்

உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து இந்தியாவிற்கு இருந்தாலும், ஒரு ஹெக்டேருக்கு அதிகமாக மாம்பழம்
உற்பத்தி செய்யும் நாடு என்ற அந்தஸ்ஸதை பெரு நாடு பெற்றுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 18 டன் மாம்பழம் உற்பத்தி செய்கிறது. இந்தியா ஒரு ஹெக்டேருக்கு 6.3 டன் தான் உற்பத்தி செய்கிறது. ஆனால், வருடத்திற்கு 16.3 மில்லியன் டன் மாம்பழம் உற்பத்தி செய்து உலகின் நம்பர் ஒன் உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. ஆனால், ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். பெரு நாடு மட்டும் வருடத்திற்கு 450 கோடி ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


ரூபாயும், டாலரும்

டாலருக்கு எதிராக ரூபாய் 54.30 வரை சென்றது. அப்போது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்வர்ட் காண்டிராக்ட் போடக்கூட மறந்தார்கள். ஆனால், பாருங்கள் தற்போது 50.30 வரை வந்து நிற்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? புதிய ஏற்றுமதியாளர்கள் பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 கண்காட்சி

மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக் அபிவிருத்தி கழகம் மார்ச் மாதம் 15 முதல் 17 வரை ஒரு உலகளவிளான கண்காட்சியை பெங்களூரில் நடத்தவுள்ளது. இந்தியா ஆயுர்வேதம், ஹெர்பல் ப்ராடக்ஸ் போன்றவைகளில் உலகப் புகழ் பெற்றது. சமீப காலங்களில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அலோபதி தவிர மற்ற மருந்துக்களை பார்க்க, வாங்கத் தொடங்கிவிட்டனர். ஆதலால், இது போன்ற ஒரு கண்காட்சி இந்தியப் பொருட்களின் விற்பனையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அருகில் உள்ள பெங்களூரில் நடப்பதால் இந்தப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் சென்று பார்த்தால் அது நிச்சியம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



கேள்வி பதில்
ராமராஜ்
கரூர்



கேள்வி2012ம் வருடத்தின் டெக்ஸடைல்ஸ டிரண்ட்டுகளை எப்படி தெரிந்து கொள்வது?


பதில்

2012ன் டெக்ஸடைல்ஸ டிரண்ட்டுகளை அறிந்து கொள்ள சமீபத்தில் டெல்லியில் ஒரு மிகப்பெரிய கண்காட்சி நடந்தது. இதில் கார்மெண்ட் மற்றும் அதன் அக்சசரிஸ, பேப்ரிக்ஸ, ஹோம் பர்னிஷிங், மேட் அப்ஸ, இந்தியன் ஹாண்டிகிராப்ட்ஸ, ஹாண்ட்லூம், சில்க், கம்பளி மற்றும் கம்பளி ப்ராடக்ஸ, ஜுவல்லரி மற்றும் கார்பெட் ஆகிய துறைகளில் 2012ல் என்ன டிரண்ட் இருக்கும் என்று இந்த கண்காட்சி நடத்தி காட்டியது. சென்ற வருடம் இதே போல ஒரு கண்காட்சி வெற்றிகரமாக நடந்ததால் இந்த வருடம் ஜனவரி மாதம் டெல்லியில் இது மறுபடி நடந்தது. அடுத்த வருடம் ஜனவரியிலும் இருக்கும்.  இது தவிர டிரெண்ட்களை உங்களை சொல்லித்தர பல இணையதளங்களும் இருக்கின்றன.




இந்தத் தொடர் குறித்து உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment