Wednesday, May 16, 2012

ரோஜா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ரோஜா உற்பத்தி  மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ஆசியாவில் அதிகமான ரோஜா மலர் சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் திறந்த வெளியிலும், பசுமை கிடங்கு முறையிலும் விவசாயிகள், 5,000 ஹெக்டேரில் ஆண்டு முழுவதும் ரோஜா மலர் சாகுபடி செய்கின்றனர்.

ஓசூர் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால், ரோஜா உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ரோஜாவின் தரம் குறைந்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. 

பசுமை கிடங்குகளில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. திறந்த வெளியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், உள்ளூர் பண்டிகைகள், முகூர்த்த நிகழ்ச்சிகளை குறி வைத்து வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போது செடிகளில் உற்பத்தியாகும் பூக்கள் தரமற்றதாக உள்ளன.அதனால், தற்போது ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாட்டு ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த காலத்தில், காம்புடன் கூடிய ஒரு மலர் 45 முதல் 50 செ.மீ., வரை இருந்தது. தற்போது பூக்கள் சிறுத்தும், காம்பு கட்டையாகவும் இருக்கிறது. அதனால், தற்போது முற்றிலும் வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 

No comments:

Post a Comment