Thursday, December 13, 2012

உலகத்தை சிவப்பாக்கும் ஈரானின் குங்குமப்பூ


உலகத்தை சிவப்பாக்கும் ஈரானின் குங்குமப்பூ

ஈரானின் குங்குமப்பூ உலகளவு புகழ் பெற்றது. அங்கிருந்து சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. யுனைடெட் அரபு நாடுகள், ஸ்பெயின், சைனா, ஜெர்மனி, இத்தாலி, தைவான், சுவிடன், சவுதி அரேபியா, ஹாங்காங், இந்தியா ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்த நாடுகள் எல்லாம் கலரைப் பற்றிக் கவலைப்படும் நாடுகள் ஆகும். மேலும் உணவுப் பொருளாகவும் உபயோகப்படுத்தபடுகிறது. 

Wednesday, December 12, 2012

வாழைப்பழ டிரெயின்


வாழைப்பழ டிரெயின்

கேரளாவிலிருந்து ஒரு முழு டிரெயின் முழுவதும் பழங்கள் குறிப்பாக வாழைப்பழம், காய்கறிகள் ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு செல்கிறது. வட இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இது போன்ற டிரெயின்கள் விடப்படுகின்றன. வரும் டிரெயின்களில் பைனாப்பிளும் செல்லும். கேரளாவிற்கு ஆட்கள் செல்வதற்கு டிரெயின் டிக்கெட் எடுப்பதற்குள் தாவு கழண்டு விடும். காய்கறிகள், பழங்கள் கொடுத்து வைத்தவை, நசுங்காமல் செல்கின்றன.

Thursday, December 6, 2012

5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி


5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி

சமீபத்தில் நொய்டாவில் 4 நாட்கள் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. கண்டுகளித்தவர்களில் 5000 வெளிநாட்டு கம்பெனிகளும் அடங்கும் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. ஏனெனில் இவைகளில் பாதியளவு பிசினசாக மாறும் வாய்ப்புள்ளது. இந்தக் கண்காட்சி மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் பிசினஸ்  நடந்திருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பெரிய கண்காட்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாவிடினும், உங்கள் வியாபாரத்தின் தொடக்கம் சிறிய கண்காட்சிகளில் இருந்து தொடங்கட்டும்.

முடியும் ஏற்றுமதியாகிறது


முடியும் ஏற்றுமதியாகிறது

இந்தியாவில் தலைமுடிகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஆந்திராவில் எலுருவில் உள்ள சீனிவாசா ஹேர் இண்டஸ்டீரிஸ்  என்ற கம்பெனி தான் செய்து வருகிறது. சரி, எதற்காக வெளிநாடுகளில் முடிகளை வாங்குகிறார்கள். விக்குகள் தயாரிக்க, மேலும் தலைமுடியிலிருந்து ஒருவித அமிலம் கிடைக்கிறது அதை தயாரிக்கவும் இறக்குமதி செய்கிறார்கள்.

Monday, December 3, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்தியாவின் வளர்ச்சியில் எஸ்.எம்.ஈ. கம்பெனிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவர்களுக்கு உதவும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் மேலே கண்ட இணையதளம். 500,000 பிசினஸ  லிஸ்டிங்களுக்கு மேல் உள்ளது. மேலும், டெண்டர்கள், பி2பி கம்யூனிட்டி, பிசினஸ  ஆர்ட்டிகல்ஸ், உங்கள் கேள்விகளுக்கு பதில் என்று அவர்களின் சேவை நீண்டு கொண்டே போகிறது. 600 டிராப்ட் அக்ரிமெண்ட்கள் வேறு இருக்கிறது. இந்த இணையதளத்தை தமிழிலும் மாற்றி படிக்கலாம். வேறு என்ன வேண்டும் உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய? இன்றே செல்லுங்கள் இந்த இணையதளத்திற்கு, பயன் பெறுங்கள்.

Saturday, December 1, 2012

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம்
5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 
செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும். 

தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது


தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது 

தமிழ்நாட்டில் தேங்காய் வியாபாரத்தில் முக்கிய இடம் பிடிப்பது பொள்ளாச்சி அதன் சுற்றுப்புறங்கள் தாம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் லட்சக்கணக்கான தேங்காய்கள் செல்கின்றன. சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி ஆகிய இடங்களிலும் தேங்காய் மொத்த வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.