Monday, March 3, 2014

இந்தியாவில் தானிய உற்பத்தி கூடி வருகிறதா? ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

கேள்வி பதில்

கனகராஜ்
சென்னை


கேள்வி
இந்தியாவில் தானிய உற்பத்தி கூடி வருகிறதா? ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

பதில்
தானிய உற்பத்தி கூடி வருகிறதா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் கூடி வருகிறது.

உதாரணமாக அரிசி உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 96.69 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 101.80 மில்லியன் டன்னாக இருக்கிறது.
கோதுமை உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 78.57 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 92.30 மில்லியன் டன்னாக இருக்கிறது.
பருப்பு வகைகளின்  உற்பத்தி 2007-08ம் வருடத்தில் 14.76மில்லியன் டன்னாக இருந்தது. அது 2012-2013ம் வருடத்தில் 17.58மில்லியன் டன்னாக இருக்கிறது.
ஏற்றுமதி என்று பார்க்கும் போது அரிசி, கோதுமை ஆகியவைகளுக்கு வாய்ப்புக்கள் இருக்கிறது. அரசாங்கத்தின் அறிவிப்புக்களின் படி அதாவது ஏற்றுமதி செய்யலாம், செய்யக்கூடாது என்ற பின்பற்றுதல்களின்படி ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. பருப்பு வகைகளில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. ஆதலால், இறக்குமதி தான் நடைபெற்றுவருகிறது.

No comments:

Post a Comment