Thursday, March 24, 2016

கொய்யா பழம் ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்
கருணாகரன், மதுரை

கேள்வி பதில்
கொய்யா பழம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

கேள்வி
ஏன் ஏற்றுமதி செய்ய முடியாது? உலகளவில் கொய்யா என்றால் பெரிய சைஸ் தான் இருக்கும். இந்திய அளவில் கொய்யா என்றால் மீடியம் சைஸ் தான் கிடைக்கிறது. ஆதலால், வெளிநாடுகளில் அதிகம் விரும்பபடுவதில்லை. மஹாராஷ்டிராவில் நாசிக், ஷிரிடி ஆகிய ஊர்களில் கிடைக்கும் கொய்யா மிகவும் சுவையாகவும், பெரிய சைஸ் ஆகவும் இருக்கிறது. ஆதலால், அங்கிருந்து நிறைய ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மிகவும் குறைவாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கொய்யா என்றால் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கோவிலாம்பூண்டியும், மதுரையும் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது.

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com




No comments:

Post a Comment